'உங்களை சந்தித்தால் பாக்கியம் கிடைக்கும்!-அனுப்புநர் ஓ.பி.எஸ்; பெறுநர் மோடி; சந்திக்க வேண்டி கடிதம்!
பிரதமர் மோடி வருகிற ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் சில இரயில்வே திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கவிருக்கிறார். இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வேண்டி ஓ.பன்னீர்செல்வம் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், 'எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருவீர் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தாத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனிமரியாதை மற்றும் பாக்கியம்.' எனக் கூறியிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.கவோடு நெருக்கம் காட்டி வந்த நிலையில், சமீபமாக பா.ஜ.க அவருக்கு அவ்வளவாக ஆதரவு அளிப்பதில்லை. அமித் ஷா தமிழகம் வந்து அதிமுகவோடு கூட்டணியை உறுதி செய்தபோதும் ஓ.பி.எஸ் நேரம் கேட்டிருந்தார். அமித் ஷா ஓ.பி.எஸ் யை சந்திக்கவில்லை. அதேமாதிரி, முருகர் மாநாட்டுக்கும் ஓ.பி.எஸ்ஸூக்கு அழைப்பில்லை. இந்நிலையில்தான் வெளிப்படையாகவே பிரதமரை சந்திக்க வாய்ப்புக் கேட்டு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருக்கிறார்.