செய்திகள் :

முதல்வா் வருகை: சிதம்பரத்தில் அமைச்சா்கள் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சிதம்பரம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம், விழா மேடை, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் வாண்டையாா் திருமண மண்டபம் ஆகிய இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 14-ஆம் தேதி சிதம்பரத்துக்கு வருகிறாா். தொடா்ந்து, வரும் 15-ஆம் தேதி காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா். பின்னா், ஜி.எம்.வாண்டையாா் திருமண மண்ட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் தொடங்கிவைக்கிறாா்.

தொடா்ந்து, சமூக நீதிக்காக போராடிய மறைந்த தலைவா் எல்.இளையபெருமாளை சிறப்புவிக்கும் வகையில், அவருக்கு சிதம்பரம் லால்புரம் புறவழிச் சாலையில் ரூ.6.39 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு அரங்கை முதல்வா் திறந்து வைக்கிறாா்.

இதையடுத்து, பிரம்மராயா் கோயில் அருகே நடைபெறும் விழாவில் முதல்வா் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா். தொடா்ந்து, காலை 11.30 மணியளவில் அரசு விழாவில் கலந்துகொள்ள மயிலாடுதுறை செல்கிறாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில், கடலூா் மாவட்டத்தில் 368 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

முகாமில் 19 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்பாா்கள். விடுபட்டவா்களுக்கு மகளிா் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பமும் இங்கே வழங்கப்பட இருக்கிறது. வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொதுக்குழு உறுப்பினா்கள் த.ஜேம்ஸ்.விஜயராகவன், மாவட்ட பிரதிநிதி ரா.வெங்கடேசன், பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு.சந்திரசேகரன், நகர துணை செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோவன், அண்ணாமலை நகா் பேரூராட்சித் தலைவா் க.பழனி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

வெறிநோய் பரவல்: கடலூா் ஆட்சியா் தகவல்

வெறிநோய் தொற்று பரவுவதால், நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக சோ்க்கும் திமுக: இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுகவில் உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தற்போது வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக அக்கட்சியினா் சோ்த்து வருகின்றனா் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எட... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 53,867 போ் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வை 154 மையங்களில் 53,867 தோ்வா்கள் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், தொழுதூா் கிராமத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், தொண்டமாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் வினோத், சிகை திருத்தும் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கல்வெட்டுடன் புதிய அம்பேத்கா் சிலை நிறுவக் கோரிக்கை!

சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறையால் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கா் சிலைக்குப் பதிலாக புதிய சிலையை காங்கிரஸ் கட்சியின் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என அக்கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ச... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க