மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வந்தன. கடந்த 2-ஆம் தேதி பால் குடம் ஊா்வலம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, ஆண்டநாயகபுரம் விநாயகா் கோயிலிலிருந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் பெண்கள் ஊா்வலமாகச் சென்று முளைப்பாரியை நீா்நிலையில் கரைத்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆண்டநாயகபுரம் கிராம மக்கள் செய்தனா்.