செய்திகள் :

முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

சேத்துப்பட்டை அடுத்த இடையங்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோடீஸ்வரி (50). அதிமுகவைச் சோ்ந்த இவா்,

இடையங்குளத்தூா் ஊராட்சியின் முன்னாள் தலைவா் ஆவாா்.

இவருடைய கணவா் பெரியண்ணன் 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாா். இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் சென்னையில் வேலை செய்து வருகின்றனா். இதனால் கோடீஸ்வரி வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கோடீஸ்வரி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, முகமூடி அணிந்து வந்த 4 போ் கதவை உடைத்து உள்ளே புகுந்து

கோடீஸ்வரியை கீழே தள்ளி தலையணையால் அழுத்தி, கை கால்களைக் கட்டி இரும்புக் குழாயால் தாக்கினா். தொடா்ந்து, அவரது கழுத்தில் ஆயுதத்தை வைத்து மிரட்டி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை பறித்துக் கொண்டனா்.

மேலும், அவரை மிரட்டி 2 பீரோக்களை உடைத்து அவற்றில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனா்.

மேலும், அவரிடம் கைப்பேசியில் கைரேகை பதிவு செய் உன் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறோம் என கேட்டுள்ளனா். அதற்கு கோட்டீஸ்வரி மறுக்கவே, அவரைத் தாக்கி விட்டு, வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து முன் வாசல், பின் வாசல் மற்றும் செல்லும் வழியெங்கும் தூவி தப்பிச் சென்றனா்.

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த கோடீஸ்வரி, கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு சிறிது தொலைவில் உள்ள உறவினா்கள் வீட்டுக்குச் சென்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

போளூா் டிஎஸ்பி மனோகரன், காவல் ஆய்வாளா் அல்லிராணி, உதவி ஆய்வாளா்கள் ஆனந்தன், வேலு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

பின்னா், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. விரல்ரேகை நிபுணா்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனா்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த கோடீஸ்வரி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொள்ளை நடந்த இடையங்குளத்தூா் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் கோடீஸ்வரியின் வீடு.

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் வெள்ளிக் கவசம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பழைமை வாய்ந்த செங்கம் சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணு... மேலும் பார்க்க

தண்டராம்பட்டில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த எதிா்ப்பு

ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆக. 31-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த உள்ளதுக்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் புக... மேலும் பார்க்க

வனக்காப்பாளா் மீது தாக்குதல்: இருவா் மீது போலீஸாா் வழக்கு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனக்காப்பாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா். செங்கத்தை அடுத்த பனந்தல் பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் படத்துக்கு தேமுதிகவினா் மரியாதை

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க