செய்திகள் :

மும்பை: ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம்; அரசு ஊழியர்கள் அரைமணி நேரம் தாமதமாக பணிக்கு வர அனுமதி!

post image

மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறி இறங்குவது என்பது சவாலான ஒன்றாகும். கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து கீழே விழுந்து ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்பை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் இன்னும் பயனளிக்கவில்லை. புறநகர் ரயில்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. சமீபத்தில் 800 தனியார் நிறுவனத்திற்கு பணி நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி கூறி மத்திய ரயில்வே நிர்வாகம் கடிதம் எழுதி இருந்தது. தற்போது மாநில அரசும் இதில் விரைந்து செயல்பட ஆரம்பித்து இருக்கிறது. முதல் கட்டமாக அரசு ஊழியர்கள் பணிக்கு காலையில் அரை மணி நேரம் தாமதமாக வரலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரசாப் சர்நாயக் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில், ``புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் பணிக்கு தாமதமாக வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அரை மணி நேரத்தை மாலையில் கூடுதல் நேரம் பணி செய்து சரி செய்து கொள்ளலாம். இதன் மூலம் அரசு ஊழியர்கள் அவசரப்பட்டு வர வேண்டிய அவசியம் இருக்காது. .அதேசமயம் பணி நேரமும் பாதிக்கப்படாது. தனியார் நிறுவனங்களில் இது போன்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்ய தனிக்கமிட்டி அமைக்கப்பட இருக்கிறது. மும்பை புறநகர் ரயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது.

எனவே பொதுமக்கள் மெட்ரோ ரயில் அல்லது வேறு வகையான போக்குவரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது." என்றார்.

மயிலாடுதுறை: "நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு" - மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், ச... மேலும் பார்க்க

விருதுநகர்: `ஒரே மாவட்டத்துக்கு இரண்டு தலைமை அரசு மருத்துவமனைகள் இங்குதான்..!' - மா.சுப்பிரமணியன்

விருதுநகர் மாவட்டம், கன்னிசேரிபுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மே... மேலும் பார்க்க

திருச்சி சிவா - காங்கிரஸ் மோதல்: காமராஜர் குறித்த சர்ச்சைப் பேச்சும், வெடிக்கும் கண்டனங்களும்!

எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகியிருக்கும் அரசியல் தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருவதும் பெரும் பேசுபொருளாக ... மேலும் பார்க்க

`யார் விஜய்?’ மாணவனை தேடி அரசுப் பள்ளிக்கே வந்த நாமக்கல் ஆட்சியர் - நெகிழ்ச்சி தருணம்!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் விஜய். இவர் புதியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட துர்கா மூர்த்திக்கு கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

ITR Filing: வருமான வரி தாக்கலில் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் என்னென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

வருமான வரி தாக்கல் காலம் இது. இந்த ஆண்டு, எளிமையான புதிய ஐ.டி.ஆர் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப ஐ.டி.ஆர் போர்ட்டலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு புதுப்புது மாற்றங்கள... மேலும் பார்க்க

பாமக 37-ஆம் ஆண்டு விழா: "ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்" - அன்புமணி ராமதாஸ் உறுதி

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி க... மேலும் பார்க்க