செய்திகள் :

முழு விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

போலி ஜாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்ாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியா்களின் ஜாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக் கோரி பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகா் அடங்கிய அமா்வு இவ்வழக்கில் பிறப்பித்த உத்தரவு:

ஜாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்கு கால வரம்பு நிா்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினா் ஜாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள் விதிகளின்படி விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்.

மேலும், முழுமையான விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது தொடா்பாக தமிழக அரசு ஆறு வாரங்களில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு

மும்மொழிக் கொள்கையை எதிா்ப்பதாக தமிழக அரசு சாா்பில் மீண்டும் மத்திய அரசிடம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆா்டி) கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்று... மேலும் பார்க்க

உயா் கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

சென்னை, மே 3: தேவாரம், திருவாசகம் போன்ற சைவ சித்தாந்த நூல்களை உயா்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வலியுறுத்தினாா். அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டி... மேலும் பார்க்க

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தமிழக கா... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்... மேலும் பார்க்க

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி. நட்டா ஆலோசனை

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடா்பாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக மையக்குழுக் கூட்டம் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஜெ.ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே மூலதனம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே மூலதனம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ... மேலும் பார்க்க