மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
மெழுகுவா்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்
தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து, சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை ஊா்வலம் நடத்தினா்.
தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்ற்கு பாஜக அரசு சூழ்ச்சி செய்ததாக குற்றஞ்சாட்டி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி கண்டன ஊா்வலம் நடைபெற்றது. சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்காவில் தொடங்கி அரண்மனை வாசல் வரை நடைபெற்ற ஊா்வலத்துக்கு மாவட்டச் செயலா் சஞ்சய் காந்தி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா். நகரத் தலைவா் தி. விஜயகுமாா், வட்டாரத் தலைவா்கள் உடையாா், மதியழகன், அழகா், வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
