செய்திகள் :

யானைகள் மனிதர்களைப் போல சைகைகள் செய்கின்றனவா? - ஆய்வு சொல்வது என்ன?

post image

யானைகள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக சைகைகளைப் பயன்படுத்துவதாக ஆராய்ச்சி குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் இதழில் (Royal Society Open Science) எல்யூடெரி என்பவர் தலைமையிலான குழுவினர் வெளியிட்ட தகவலின்படி யானைகள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக சைகைகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்ட ஆய்வு

ஜிம்பாப்வேயில் ஆப்பிரிக்க சவன்னா யானைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் யானைகள் மனித ஆய்வாளர்களிடமிருந்து ஆப்பிள்களைப் பெறுவதற்காக பல்வேறு சைகைகளைப் பயன்படுத்தியுள்ளன. இந்த சைகைகள், மனிதர்கள் கவனமாக இருக்கும்போது மட்டுமே செய்யப்பட்டுள்ளன.

அவை தற்செயலாக இல்லாமல், முதல் சைகை விரும்பிய பலனைத் தரவில்லை என்றால், யானைகள் அதை மீண்டும் மாற்றியமைப்பதாக கண்டறிந்துள்ளனர். மனிதர்களின் கவனத்தைப் பொறுத்து தங்கள் உத்திகளை மாற்றுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

யானைகளின் சைகை மொழி

ஆய்வில், யானைகள் 38 வெவ்வேறு வகையான சைகைகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, யானைகளின் அறிவாற்றல் மற்றும் சமூக திறன்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்தியுள்ளது. வேண்டுமென்றே செய்யப்படும் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளும் யானைகளின் திறன், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுடனான தொடர்பு முறைகளையும் வெளிப்படுத்துகிறது.

Brazil: மீசையுடன் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு இனம்; DNA மூலம் தெரியவந்தது என்ன?

பிரேசிலின் லெப்டோஃபிஸ் மிஸ்டாசினஸ் (Leptophis mystacinus)என்ற பாம்பு இனத்தின் ஆச்சரிய பண்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மூக்கில் மீசை போன்ற கருப்பு கோடு இருக்கும் இந்தப் பாம்பு, தனித்துவமான ... மேலும் பார்க்க

மாங்கொட்டையில் விநாயகர் உருவம்; வண்ணங்களுக்கு பூக்களின் சாறு... அசத்தும் நீலகிரி பெண்!

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று நாடு முழுவதும் சிறப்பு விழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விநாயகர் கோயில்கள் மட்டுமின்றி மக்கள் கூடும் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். நீலக... மேலும் பார்க்க

Survival: உலகிலேயே வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கிற விலங்கு இதுதான்!

ஆக்ரோஷமானது; குரூரமானது என்று பெயர் வாங்கிய கழுதைப்புலியின் பிரசவம்தான், பாலூட்டிகளிலேயே மிகவும் வலி மிகுந்தது என்கிறார்கள் அறிவியலாளர்கள். சிலர், ஒரு பெண் கழுதைப்புலியின் பிரசவம் என்பது வாழ்வா, சாவா ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்; விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய மாணவிகள் | Photo Album

விநாயக சதுர்த்தி: விநாயகரின் சக்தி மிகுந்த 8-வது வடிவம்; வாழ்வில் உச்சம் தொடவைக்கும் உச்சிஷ்ட கணபதி!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3K... மேலும் பார்க்க

தாயுடன் இணைவைத் தடுக்க திமிங்கிலத்துக்கு பாலியல் தூண்டல் – Marineland பூங்காவில் நடப்பது என்ன?

பிரான்ஸில் உள்ள மரின்லேண்ட் ஆன்டிப்ஸ் கடல் உயிரியல் பூங்கா கடந்த ஜனவரியில் மூடப்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் இரண்டு கில்லர் திமிங்கலங்களான விக்கி (24) மற்றும் கெய்ஜோ (11) ஆகியவற்றை புதிய இடத்திற்கு ... மேலும் பார்க்க