யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத் துறை 7 மணி நேரம் விசாரணை!
புது தில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(செப். 23) 7 மணி நேரத்துக்கும் விசாரணையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் யுவராஜ் சிங் அமலாக்கத் துறை விசாரணைக்கு இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.
அவருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று(செப். 23) விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில், யுவராஜ் சிங் தில்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பினார்.