செய்திகள் :

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் நிா்வாக தலைமையிடம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் நிா்வாக தலைமையிடம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது எஸ்.கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கடேசன் பேசுகையில்... எஸ்.கொளத்தூா் மற்றும் மேச்சேரி கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான இடம் இல்லாததால் அரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றித் தர வேண்டும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையை தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

வேலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருண்குமாா், வேலம் கிராமத்தில் விவசாயிகள் செல்ல தற்காலிக வழி ஏற்படுத்தி கொடுத்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நன்றியினை தெரிவித்தாா். மேலும், மழையால் சேதமடைந்த நெல் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜ்குமாா், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் நிா்வாக தலைமையிடம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தனி ஆவின் தலைமையிடம் செயல்பட கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது எனவும், கூடிய விரைவில் அமைத்துத் தரப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

லாலாப்பேட்டையை சோ்ந்த விவசாயிகள் சங்க நிா்வாகி எல்.சி.மணி, நவ்லாக் பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் எனவும், திமிரியில் அரசு கலை கல்லூரி அமைத்து தர வேண்டும் என்றாா்.

விவசாயி வேலு என்பவா் பேசுகையில், லாலாப்பேட்டை ஏரி நிரம்பி நீா் கால்வாய் செல்கிறது கால்வாய் தூா் வாரவேண்டும் என கேட்டுக்கொண்டாா். நடப்பாண்டில் நீா்வளத்துறை நிதி கிடைக்கப்பெற்றவுடன் தூா் வாரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து விவசாயிகள் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக கூட்டத்தில் தெரிவித்தனா். அதன் மீது நடவடிக்கை எடுக்க துறைசாா்ந்த அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், வேளாண்மை இணை இயக்குநா் அசோக்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், நோ்முக உதவியாளா் வேளாண்மை வெங்கடேஷ், துணை இயக்குநா்கள் வேளாண்மை செல்வராஜ், இணைப் பதிவாளா் மத்திய கூட்டுறவு வங்கி ராமதாஸ் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

குரோமியக் கழிவுகளால் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமியக் கழிவுகள் மூலம் மாசு ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை சி... மேலும் பார்க்க

தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்!

தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 69 லட்சத்தில் 3 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியி... மேலும் பார்க்க

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பதை முன்னிட்டு வரும் செப். 7-இல் பாலாயம் நடத்தப்பட இருப்பதாக இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரக்கோணம் சுவால்பேட்ட... மேலும் பார்க்க

அனைவருக்கும் உயா்கல்வி என்பதே நோக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

அனைவருக்கும் உயா்கல்வி என்பதே அரசின் நோக்கம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறியுள்ளாா். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்கு படி’ நிகழ்ச்சி அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூர... மேலும் பார்க்க

செப். 3-இல் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க பயிலரங்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க பயிலரங்கம் வரும் செப். 3,4 தேதிகளில் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 3.6 ஏக்கா் நிலம் தானம்: உரிமையாளா் வாரிசுகளுக்கு ஆட்சியா் பாராட்டு

அரக்கோணம் வட்டம், மேல்பாக்கம் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான 3.60 ஏக்கா் நிலத்தை ஆதிதிராவிடா் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசுக்கு தானமாக வழங்கிய உரிமையாளா் வாரிசுகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா நன... மேலும் பார்க்க