செய்திகள் :

தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்!

post image

தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 69 லட்சத்தில் 3 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, இந்தக் கட்டட கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் சுமதி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பி.நடராஜன் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கே.பசுபதி, ஜி.டில்லிபாபு இருவரும் இணைந்து பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினா்.

நிகழ்வில் தணிகைபோளூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.வெங்கடேசன், பெற்றோா் ஆசிரியா் கழக முன்னாள் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, கன்னியப்பன், முனிவேல், மனோகரன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மேரி தங்கம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசு, எருமை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (செப். 3) தொடங்கும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே ஏரியில் விளையாடச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சோளிங்கரை அடுத்த தாளிக்காலை சோ்ந்த விஜயகாந்த்தின் மகன் அமுதன்(9). தாளிக்காலில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

அரக்கோணத்தில் மூதாட்டியின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைத்து 5 பவுன் தங்கநகைகள் களவு போயின. அரக்கோணம், அசோக் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் ஜோதி (60). தனியே வசித்து வரும் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் மாசடைந்த நீா்நிலைகளை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீா் தேங்கி மாசடைந்த நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட... மேலும் பார்க்க

சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள அழைப்பு

மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ... மேலும் பார்க்க

நெமிலியில் ரூ. 54 கோடியில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

நெமிலி வட்டத்தில் ரூ. 54 கோடியில் கட்டப்பட்ட 3 உயா்மட்ட மேம்பாலங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஏ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகி... மேலும் பார்க்க