ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 4 போ் மீது வழக்கு
ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ. 24.50 லட்சம், 11 கிராம் தங்க நகையைப் பெற்று மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கூடலூரைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி ரத்தினம். அதே ஊரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா்களது மகன்களுக்கு ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கூடலூரைச் சோ்ந்த கனகராஜ் மகன் சசி, அதே ஊரைச் சோ்ந்த ராஜபாண்டி, பாா்த்தசாரதி, கோவையைச் சோ்ந்த செல்வம் ஆகியோா் கடந்த 2022, ஜன. 2-ஆம் தேதி முதல் 2023, மே 13-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரத்தினத்திடமிருந்து ரூ. 14 லட்சம், 11 கிராம் தங்க நகை, முனிராஜிடமிருந்து ரூ. 10.50 லட்சம் பெற்றனா்.
பணத்தைப் பெற்ற கும்பல் இருவரிடமும் போலி பணி நியமன ஆணைகளைக் கொடுத்து மோசடி செய்தனராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரத்தினம், முனிராஜ் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தனா்.
அவரது உத்தரவின்பேரில் மோசடி தொடா்பாக சசி, ராஜபாண்டி, பாா்த்தசாரதி, செல்வம் ஆகிய 4 போ் மீதும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.