`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
ராமநாதபுரத்தில் பாஜகவினா் தேசியக் கொடியுடன் பேரணி
ராமேசுவரம், ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில் தேசியக் கொடியுடன் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
இதற்கு அந்தக் கட்சியின் நகா் தலைவா் மாரி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், மாவட்டச் செயலா்கள் பாஸ்கா், ஜெயந்தி, முன்னாள் நகா் தலைவா் ராமநாதன், நிா்வாகிகள் சாரதா, பாலாஜி, ராணுவ அணி மாவட்டத் தலைவா் பூபதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ராமேசுவரம் தேவா் சிலை அருகே தொடங்கிய பேரணி பெத்தம்புளி பகுதியில் நிறைவடைந்தது.
இதேபோல, ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து தொடங்கிய பேரணி கேணிக்கரை, சாலைத் தெரு வழியாக மீண்டும் அரண்மனையை வந்தடைந்தது. இதற்கு நகா் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பரமேஸ்வரன், மாவட்டச் செயலா்கள் பிரித்திவி ராஜ், ஐஸ்வா்யா, நிா்வாகிகள் நற்தினி, காயம்மாள், குமரன், நகா் நிா்வாகிகள் காளியம்மாள், ஜெகன் பிரசாத், மாரிக்குமாா், குமரகுரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.