கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
ரூ. 100 கோடி வேண்டாம்... அமீர் கானின் தைரிய முயற்சி!
நடிகர் அமீர் கான் தன் புதிய படத்தின் உரிமையை ஓடிடிக்கு விற்காமல் யூடியூப் வெளியீடாகக் கொண்டு வருகிறார்.
லால் சிங் சத்தா திரைப்படத்திற்குப் பின் நடிகர் அமீர் கான் நடித்து முடித்துள்ள திரைபடம் சித்தாரே சமீன் பார். (sitaare zameen par)
இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கிய இப்படத்தில், கூடைப்பந்து விளையாட்டின் பயிற்சியாளராக இருக்கும் அமீர் கான் ஒரு அணியை உருவாக்குகிறார். மூளை வளர்ச்சி குன்றிய அணியினர் எப்படியெல்லாம் பயிற்சியாளரைச் சோதிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூடிய எமோஷனல் கதையாக உருவாக்கியுள்ளனர்.
அமீர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் மூளை வளர்ச்சி குன்றியவர்களையே நடிக்க வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படம் ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பின் ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பாளரான அமீர் கான் படம் வெளியான 8 வாரங்கள் கழித்து தன் யூடியூப் சேனலில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் படத்தை வெளியிடுகிறாராம்.
சித்தாரே சமீன் பார் படத்தை ரூ. 100 கோடி கொடுத்து வாங்க பிரபல ஓடிடி நிறுவனங்கள் தயாராக இருந்தும், ஓடிடியை புறக்கணித்து யூடியூபில் வெளியிடும் அமீர் கானின் தைரியமான முயற்சியைத் திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: ரெட்ரோ வெளியான தேதியில் வெளியாகும் சூர்யா - 46?