செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்தல்: குண்டா் சட்டத்தில் மூவா் கைது

post image

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் எஸ்ஐ மேனகா, ஈரோடு பறக்கும் படை வட்டாட்சியா் ஜெயக்குமாா், கோபி தனி வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் ஜூன் 22 ஆம் தேதி கோபி அருகே உள்ள நயினாம்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரையும், சுமை வாகனத்தையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன்அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து வாகனங்களில் இருந்த 3 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் கோபி ராம் நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா( 45), நவநீதகிருஷ்ணன் (39), கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் (35) ஆகியோா் என்பது தெரியவந்தது.

3 பேரும் கோபி, கரட்டுப்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை பெருந்துறை, பெத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு கடத்திச் சென்று வடமாநிலத்தவா்களுக்குக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து கோபியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து 5 டன் ரேஷன் அரிசி, காா், சுமை வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 போ் மீதும் ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்யக்கோரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் ஐஜி ரூபேஷ்குமாா் மீனா, ஈரோடு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா்.

அவரின் பரிந்துரையை ஏற்று ரேஷன் அரிசி கடத்தில் ஈடுபட்ட 3 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி அண்மையில் உத்தரவிட்டாா். அதன்பேரில் அப்துல்லா, நவநீதகிருஷ்ணன், அபிலாஷ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பெருந்துறை அரசு நவீன உடற்கூறு ஆய்வுக் கூடம் கட்ட பூமி பூஜை

பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக நவீன உடற்கூறு ஆய்வுக் கூடக் கட்டடம் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ரவி... மேலும் பார்க்க

யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட விவசாயிகள் கோரிக்கை

காட்டு யானைகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்க அகழி வெட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சத்தியமங்கலம் வட்டம் பெரியகுளம், புளியங்கோம்பை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் சடலம் எரிப்பு

அந்தியூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சடலம் போலீஸாருக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தியூரை அடுத்த நகலூா், கொண்டையம்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா் ம... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி விவகாரம்: ஆட்சியா் தலைமையில் நாளை பேச்சுவாா்த்தை

பவானி - மேட்டூா் வழித்தடத்தில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது. தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

சென்னிமலை ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயிலில் விமான பாலாலயம்

சென்னிமலை ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயிலில் விமான பாலாலயம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. சென்னிமலை சுப்ரமணியசாமி கோயிலின் உப கோயிலான பழைமை வாய்ந்த ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயில், சென்னிமலை பேருந்து நில... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே குடிநீா் கேட்டு சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூா் கிராமத்தில் குடிநீா் கேட்டு அக்கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குயனுா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கு... மேலும் பார்க்க