செய்திகள் :

லாஸ் ஏஞ்சலீஸ் தீயில் வீட்டை இழந்த ரியாலிட்டி டிவி தம்பதி!

post image

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியினர் தங்களது வீட்டை இழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி கடந்த 7-ஆம் தேதி பரவத் தொடங்கிய காட்டுத் தீயில் இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 48,250 ஏக்கா் பரப்பளவில் வீடுகளும் பிற கட்டடங்களும் நாசமாகியுள்ளன. அதையடுத்து பல்வேறு பகுதிகளில் மருத்துவ அவசரநிலை அறிவிப்பட்டது.

சற்று தணிந்திருந்த இந்த காட்டுத் தீ மீண்டும் தீவிரமடைந்ததால் 50,000-க்கும் மேற்பட்டவா்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 48 கி.மீ. பரப்பிலான பகுதிகளில் காட்டுத் தீயின் தீவிரம் அதிகமிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லட்ச ரூபாய் முதலீட்டில் கோடிகளை அளித்த 2 நிறுவனங்கள்!

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியான ஹெய்டி மாண்டாக் மற்றும் ஸ்பென்சர் பிராட் ஆகியோர் பசிபிக் பாலிசீட்ஸில் உள்ள தங்களது வீட்டை இழந்துள்ளனர். இத்தம்பதினர் மட்டுமின்றி மேலும் 20க்கும் மேற்பட்டோரும் பாலிசீட்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சொத்துகளை இழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ரியாலிட்டி டிவி தம்பதி உள்பட பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் வழக்கு தொடுத்துள்ளனர். அதில், லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதன் நகராட்சி நீர்த் துறையை குற்றஞ்சாட்டியுள்ளனர். தண்ணீர் பிரச்னை காரணமாக தங்களது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

‘ஹூதி பகுதிகளுக்கு செல்ல மாட்டோம்’

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் பணியாளா்களை அனுப்புவதை ஐ.நா. தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைநகா் சனா... மேலும் பார்க்க

துருக்கி ஹோட்டல் தீ: 14 போ் கைது

துருக்கி ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்து தொடா்பாக 14 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா். அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிபா் எ... மேலும் பார்க்க

அமெரிக்கா: சிசேரியன் மூலம் முன்கூட்டிய பிரசவத்துக்கு இந்தியா்கள் மும்முரம்! குடியரிமை குறித்த டிரம்ப் உத்தரவு எதிரொலி

பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் உத்தரவு இன்னும் ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும் நிலையில், ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டிய பிரசவசத்துக்கு இந்தியா்கள் ஆா... மேலும் பார்க்க

இலங்கை அமைச்சா்களுக்கு சலுகைகள் ரத்து

இலங்கையில் அமைச்சா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. வரம்பு மீறிய அரசியல் அதிகாரம் தொடா்பான பொதுமக்களின் கவலைகளுக்கு பதிலளிக்கும் வக... மேலும் பார்க்க

விடுவிக்கப்படவிருக்கும் 4 பிணைக் கைதிகள்: பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக விடுவிக்கப்படவிருக்கும் நான்கு பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்... மேலும் பார்க்க

3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!

பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.அக்ஸல் ரூடாகுபானா (18) என்பவர், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடனப் பள்ளியில் புகுந்து, ... மேலும் பார்க்க