செய்திகள் :

வங்கதேச படை விமான விபத்து: உயிரிழப்பு 31-ஆக உயா்வு

post image

வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானப்படை பயிற்சி விமானம் திங்கள்கிழமை மோதி வெடித்து தீப்பிடித்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி முகமது தவ்ஹீா் இஸ்லாம், ஆசிரியா் ஒருவா், 25 சிறுவா்கள் அடங்குவல். உயிரிழந்தவா்களில் ஏராளமானவா்கள் 12 வயதுக்கு உள்பட்டவா்கள்.

இதி தவிர, விபத்தில் காயடமைந்த 165 போ் பத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனா். அவா்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

குா்மிடோலா விமானப்படை தளத்திலிருந்து திங்கள்கிழமை மதியம் புறப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்-7 பிஜிஐ பயிற்சி விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உத்தரா பகுதியில் உள்ள இரு மாடி பள்ளிக் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மக்கள் வசிப்பிடங்களைத் தவிா்க்க விமானி முயன்ாக ராணுவ மக்கள் தொடா்புப் பிரிவான ஐஎஸ்பிஆா் கூறியது. ஆனால், இந்த முயற்சி தோல்வியடைந்து, விமானம் பள்ளிக் கட்டடத்தில் மோதியது.

கடந்த 2011-இல் இதே போன்ற 16 விமானங்களை வாங்கியுள்ள வங்கதேச விமானப்படை, இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைத்துள்ளது.

இதற்கிடையே, இந்த விபத்து குறித்தும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறைத்தும் உண்மைகள் மறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மைல்ஸ்டோன் மற்றும் அருகிலுள்ள பள்ளிகளில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கதேச வரலாற்றில் இந்த விபத்து மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 258-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் பேச்சுவாா்த்தைக் குழு திரும்ப அழைப்பு

போா் நிறுத்தம் தொடா்பான ஹமாஸ் அமைப்பின் ‘ஆக்கபூா்வ’ பதிலைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள தங்களது பேச்சுவாா்த்தைக் குழுவினரை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகின் அலுவலகம் நாடு திரும்புமாறு வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை: அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த 21 மாதங்களாக நீடித்... மேலும் பார்க்க

புகழ்பெற்ற மல்யுத்த நட்சத்திரம் ஹல்க் ஹோகன் காலமானார்!

அமெரிக்காவைச் சேர்ந்த மல்யுத்த ஜாம்பவானான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்ரி ஜீன் போல்லியா காலமானார்.அவருக்கு வயது 71.புகழ்பெற்ற டபிள்யூடபிள்யூஇ(WWE) மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் என்றழைக்கப்படும் டெர்... மேலும் பார்க்க

இஸ்ரேலின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா கண்டனம்!

மேற்கு கரையை ஆக்கிரமித்து இணைக்க, இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, இந்தோனேசியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனர்களின் வெஸ்ட் பாங்க் என்ற அழைக்கப்படும் மேற்கு கர... மேலும் பார்க்க

யூதர்கள் என்பதால் பயணிகள் வெளியேற்றம்? ஸ்பெயின் விமான நிறுவனம் விளக்கம்!

ஸ்பெயின் நாட்டின் விமானத்தில் இருந்து யூதர்கள் என்பதால் 44 குழந்தைகள் உள்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதற்கு, வூலிங் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வலேன்சி... மேலும் பார்க்க