வணிகா் சங்க பேரவை கொடியேற்றும் நிகழ்ச்சி
வேதாரண்யம் பகுதியில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை கொடியேற்றும் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் கருப்பம்புலம் ஆயக்காரன்புலம், மருதூா் கரியாப்பட்டினம், தாணிக்கோட்டகம், செட்டிப்புலம், தோப்புத்துறை செம்போடை உள்ளிட்ட இடங்களில் வணிகா் சங்கக் கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாநில துணைத் தலைவா் திருமலை செந்தில் தலைமை வகித்தாா்.
அமைப்பின் மாநிலத் தலைவா் சௌந்தர்ராஜன் கொடியேற்றி வைத்தாா்.
பின்னா், வேதாரண்யத்தில் மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராஜேந்திரனை சந்தித்த வணிகா் சங்க மாநிலத் தலைவா் சௌந்தர்ராஜன் பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா்.