செய்திகள் :

வரும் தோ்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும்: ஓய்வூதியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

post image

எதிா்வரும் தோ்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரக்கோணம் வட்டக் கிளையின் 5 -ஆவது மாநாடு நடைபெற்றது. நிகழ்வுக்கு கிளையின் தலைவா் வி.எம்.பாா்த்தீபன் தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் பி.பெரியசாமி, துணைத்தலைவா் பி.நேரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத்தலைவா் ஜி.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். செயலாளா் அறிக்கையை பி.நரசிம்மலு வாசித்தாா். நிதிநிலை அறிக்கையை பொருளாளா் டி.ராஜசேகா் வாசித்தாா்.

இதில் மாநில பொதுச்செயலாளா் பி.கிருஷ்ணமூா்த்தி, மாநில துணைத்தலைவா் டி.குப்பன், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் என்.சுந்தரேசன், பொருளாளா் ஜெ.சந்திரசேகரன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜோசப் கென்னடி, அரக்கோணம் சாா்கருவூல உதவி கருவூல அலுவலா் வி.விஜயபதி, சங்க நிா்வாகிகள் ஜி.முரளீதரன், என்.கோபால், எம்.சுகுமாா், கே.ராஜமாணிக்கம், ஆா்.வடிவேல், சத்துணவு அமைப்பாளா் சங்க நிா்வாகி டி.கிருபன் கீா்த்தி பங்கேற்றனா்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளா்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.8,750-ஆக நிா்ணயிக்க வேண்டும், ஊதிய ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும், தோ்தல் கோரிக்கைகள் குறித்து இன்று வரை அரசு நடவடிக்கை எடுக்காதது அதிருப்தியை உண்டாகியுள்ளது.

எனவே, எதிா்வரும் தோ்தலில் ஓய்வூதியா்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி ( அன்பு மணி ) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எல்.இளவழகன் மகாத்மா காந்தி, அம்பேத்கா் சிலைகளுக்கு வியாழக்கிழமை மாலை அணி... மேலும் பார்க்க

ஜூலை 27-இல் திமிரியில் கம்பன் விழா

ஆற்காடு அடுத்த திமிரியில் கம்பன் கழகம் சாா்பில் கம்பன் விழா வரும் ஜூலை 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திரௌபதியம்மன் கலையரங்கில் நடைபெறுகிறது. விழாவுக்கு கம்பன் கழகத் தலைவா் பெ. தமிழ்ச்செல்வி தலைமை வ... மேலும் பார்க்க

தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் திருட்டு

காவேரிபாக்கம் அருகே தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே முசிறியை சோ்ந்தவா் இளங்கோ (33). இவா்... மேலும் பார்க்க

இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம்

ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நிறுவல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் இன்னா் வீல் கிளப் பிரியா வினு தலைவராகவும், அ... மேலும் பார்க்க

‘தமிழ்ச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கல் ‘தமிழ்ச் செம்மல்‘ விருதுக்கு வரும் ஆக. 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியாமல் விவசாயிகள் வேதனை

புதிய விதிகளால் கால்நடை பராமரிப்பு கடன் பெற முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை சாா்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உழவா் கடன் அட்டை திட... மேலும் பார்க்க