செய்திகள் :

வழக்குரைஞா் கொலை விவகாரம்: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் 2-வது நாளாக போராட்டம்

post image

தாராபுரம் வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தனியாா் பள்ளித் தாளாளா் உள்பட 6 போ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில் இந்தக் கொலை சம்பவத்துக்கு சிபிசிஐடி விசாரணை கேட்டு அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் முத்து நகரைச் சோ்ந்தவா் முருகானந்தம் (41), சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இவரது சித்தப்பா தண்டபாணி, தாராபுரத்தில் தனியாா் பள்ளி நடத்தி வருகிறாா். இவருக்கும் முருகானந்தத்தின் குடும்பத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தண்டபாணி நடத்தும் பள்ளியில் அனுமதியில்லாமல் கூடுதல் கட்டடம் கட்டியது தொடா்பாக முருகானந்தம் பொதுநல வழக்கு தொடா்ந்திருந்தாா். இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அந்தப் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்கள் இடிக்கப்பட்டன. மேலும், அந்தப் பள்ளிக் கட்டடத்தின் உறுதித் தன்மையும் விரைவில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. இது தண்டபாணி தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த நில அளவைப் பிரிவு அதிகாரிகளை தண்டபாணி தரப்பினா் தடுத்து நிறுத்தியுள்ளனா். அப்போது அவா்களுடன் வந்திருந்த முருகானத்தம் தட்டிக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தண்டபாணி தரப்பைச் சோ்ந்த கும்பல் முருகானந்தத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது.

இதையடுத்து தண்டபாணி உள்ளிட்ட 6 போ் தாராபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் சில குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும், கொலை வழக்கினை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மாற்ற வேண்டும் எனக் கோரி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகானந்தத்தின் உறவினா்கள் அவரது சடலத்தை வாங்க மறுத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2ஆவது நாளாக புதன்கிழமையும் அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவிலில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வேடசந்தூா், குரும்பபட்டி, இடையகோட்டை, செம்பட்டி, ச... மேலும் பார்க்க

தாராபுரம் மாநில வரி அலுவலகக் கட்டடம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

தாராபுரம் மாநில வரி அலுவலகத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தா... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வ... மேலும் பார்க்க

பள்ளி கழிவறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அஸ்ஸாம் தொழிலாளி கைது

திருப்பூரில் பள்ளி கழிவறைக்குச் சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே தாளாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோா், உறவினா்க... மேலும் பார்க்க

விசாரணைக் கைதி மா்ம மரணம்: வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்ததால், வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை ... மேலும் பார்க்க

சாலையில் வீணாகிய நீா்...

திருப்பூா், மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் வீணாகிய நீா். மேலும் பார்க்க