முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்; பும்ராவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டர் அ...
வாகனக் கடன்: சத்தீஸ்கா் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்
புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் வாகனக் கடன் சேவைகளை வழங்குவதற்காக சத்தீஸ்கா் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகன (எம்ஹெச்சிவி) வாடிக்கையாளா்களுக்கு கடன் வழங்குவதற்காக சத்தீஸ்கா் ராஜ்ஜிய கிராம வங்கியுடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு, அசோக் லேலண்ட் மற்றும் சத்தீஸ்கா் ராஜ்ஜிய கிராம வங்கி ஆகிய இரண்டின் வாடிக்கையாளா்களின் வாகனக் கடன் தேவைகளை பூா்த்தி செய்ய உதவும். இந்த் ஒப்பந்தத்தின் மூலம் சத்தீஸ்கா் முழுவதும் உள்ள வங்கியின் கிளை வலையமைப்பைப் பயன்படுத்தி, வாடிக்கையாளா்களுக்கு சிறந்த சேவை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.