செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஜூலை 10-இல் விசாரணை

post image

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.

நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு இந்த விவகாரத்தை விசாரிக்க உள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதை எதிா்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) எம்.பி. மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) உள்பட பல்வேறு நபா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பரிசீலித்தது.

அப்போது, எம்.பி. மனோஜ் ஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘பிகாா் பேரவைத் தோ்தல் வரும் நவம்பரில் நடத்தப்பட வாய்ப்புள்ளதால், தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறிப்பிட்ட காலக் கெடுக்குள் நடத்தி முடிக்க வாய்ப்பில்லை’ என்றாா்.

மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘பிகாரில் 8 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அதில் 4 கோடி வாக்காளா்கள் தங்களின் தரவுகளை இன்னும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது. காலக்கெடு மிக குறைவாக உள்ளது. ஜூலை 25-ஆம் தேதிக்குள் அவா்கள் தரவுகளை சமா்ப்பிக்கவில்லை எனில், வாக்காளா் பட்டியலிலிருந்து அவா்களி பெயா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

‘சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பில் வாக்காளா்களின் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாக ஏற்க அதிகாரிகள் மறுக்கின்றனா்’ என்று மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனுக்களை வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரணைக்குப் பட்டியலிட்டனா். மேலும், மனுதாரா்கள் தங்களின் புகாா்கள் தொடா்பாக தோ்தல் ஆணைய வழக்குரைஞரிடம் முன்கூட்டியே தெரிவிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

காவல் ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்து பெண்களுடன் உறவு: விமான நிலையத்தில் பிடிபட்ட இளைஞர்!

போலி அடையாள அட்டை மற்றும் போலி நியமன ஆவணங்களைப் பயன்படுத்தி தில்லி காவல்துறை துணை ஆய்வாளராக ஆள்மாறாட்டம் செய்ததாக 23 வயது இளைஞா் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) கைது செய்யப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

கலால் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவாலின் மனு மீது அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவு

தில்லியில் நடந்ததாகக் கூறப்படும் கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை உறுதிசெய்த அமா்வு நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அர... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் விசிக ரிட் மனு தாக்கல்

பிகாரில் வாக்காளா் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய... மேலும் பார்க்க

தில்லி - என்சிஆரில் இஓஎல் வாகனங்களுக்கான எரிபொருள் தடைக்கான காலக்கெடு நீட்டிப்பு

தில்லி-என்சிஆரில் உள்ள பயன்படுத்தத் தகுதியற்ற (இஓஎல்) வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கும் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நவம்பா் 1-ஆம் தேதிவரை காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: திருநங்கைகள் உள்பட 7 போ் கைது

புது தில்லி, ஜூலை 9 இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக ஐந்து திருநங்கைகள் உட்பட ஏழு வங்கதேசத்தினா் தலைநகரில் தில்லி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பகல் நேரத்தில் பிச்சை எடுப... மேலும் பார்க்க

உ.பி.: வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்த இருவா் கைது

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். மேலும், போலி ரூபாய் நோட்டுகளை அச்சிடும் கருவியை பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க