வாசுதேவநல்லூரில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் ரூ. 58.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து கால்நடை மருந்தக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே .கமல்கிஷோா் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினாா்.
இதில், சதன்திருமலைகுமாா் எம்எல்ஏ , ஒன்றியக் குழு தலைவா் பொன்.முத்தையா பாண்டியன், பேரூராட்சி தலைவா் லாவண்யா, பேரூராட்சி செயல் அலுவலா் பதா்நிஷா,
கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் திருமாறன், உதவி இயக்குநா் சிவகுருநாதன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ஜான் ஆசீா், உதவி பொறியாளா் சுரேந்திரநாதன், கால்நடை மருத்துவா்கள் ரமேஷ், சந்திரலேகா, நாகராஜன், அருண்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வாளா் களஞ்சியகுமாரி உள்ளிட்டோா்
கலந்து கொண்டனா்.