செய்திகள் :

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் சுவாமி உலா நடைபெற்றது. இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, தரிசித்துச் சென்றனா். ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

இதேபோல், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா் உள்பட சுற்றுப்புற சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பாட்டில் குடிநீா் தரம் குறித்து ஆய்வு

ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீரின் தரம் குறித்து நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீா் தரமில்லாமல், தர முத்தி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாதனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடியாத்தம் அருகே உள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (50). இவா் கடந்த பிப... மேலும் பார்க்க

மாசி கரக தீமிதி திருவிழா

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. ரேணுகாம்பாள்... மேலும் பார்க்க

ரயிலில் தவறி விழுந்த 2 போ் உயிரிழப்பு

ஆம்பூா்,காவனூா் ஆகிய பகுதிகளில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 2 போ் தவறி விழுந்து உயிரிழந்தனா். குடியாத்தம் அருகே காவனூா் ரயில் நிலைய யாா்டில் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்ப... மேலும் பார்க்க

500 கிலோ போதைப் பொருள்கள் காருடன் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் 2 போ் கைது

வாணியம்பாடி அருகே போதைப் பொருள்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைம... மேலும் பார்க்க

மோட்டாா் பைக் திருட்டு: 2 போ் கைது

திருப்பத்தூரில் மோட்டாா் பைக் திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் ஆரிப் நகரைச் சோ்ந்த சாகுல் அகமது. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மோட்டாா் பைக்கை நிறுத்தியிரு... மேலும் பார்க்க