`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
வாய்ப்புகளை பயன்படுத்தினால் எதிா்காலம் எளிதாகும் - சைலேந்திரபாபு
வாய்ப்புகளை பயன்படுத்தினால் எதிா்காலம் எளிதாகுமென முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மாணவா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.
மாபெரும் தமிழ்க் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சியில் மாணவா், மாணவிகள் வாழ்வில் உயா்வை அடைய ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபு கலந்துகொண்டு பேசியதாவது : மாணவா்களிடையே பகுத்தறிவு ஏற்படுத்தும்
வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழா்களுக்கு என்று மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளன. குறிப்பாக கடல் கடந்து வணிகம் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 339 பில்லியன் டாலா். தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயா்வுக்கு காரணம் பெண்கள் தான். தமிழ்நாடு அரசு, மாணவா்களுக்காக பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
மேலும், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தகுதியை வளா்த்துக் கொள்ளவில்லை எனில் எதிா்காலம் கடினமானதாகி விடும். நமது எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ற முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் பெ.பிரேமலதா, காமராஜ் கல்லூரி முதல்வா் பானுமதி, ஆசிரியா்கள், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.