வினா - விடை வங்கி... டெல்லி சுல்தான்கள்!
1. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
(a) குத்புதீன் ஐபக்
(b) பாபர்
(c) முகமது கோரி
(d) அக்பர்
2. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி நிறுவப்பட்ட காலம்?
(a) 12 ஆம் நூற்றாண்டு
(b) 11 ஆம் நூற்றாண்டு
(c) 13 ஆம் நூற்றாண்டு
(d) 14 ஆம் நூற்றாண்டு
3. பன்டகன் என்பதன் பொருள்?
(a) போர்க் கருவி
(b) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்
(c) வரிவிதிக்கப்படாத நிலம்
(d) ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமை
4. முகமது கோரி இறந்த ஆண்டு?
(a) 1208
(b) 1206
(c) 1205
(d) 1207
5. குத்புதீன் ஐபக் யாருடைய அடிமை?
(a) முகமது கோரி
(b) பாபர்
(c) செங்கிஸ்கான்
(d) அக்பர்
6. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
(a) பால்பன்
(b) இல்துமிஷ்
(c) பாபர்
(d) குத்புதீன் ஐபக்
7. அடிமை வம்சம் இவ்வாறும் அழைக்கப்பட்டது?
(a) புரட்சிகர அரசு
(b) தன்னிச்சையான அரசு
(c) மாம்லுக் அரசு
(d) மேற்கூறிய எதுவுமில்லை
8. மாம்லுக் எனும் அராபிய சொல்லின் பொருள்?
(a) அரச வம்சம்
(b) ராணுவ பணிக்காக வழங்கப்பட்ட நிலம்
(c) ஒரு வகை நாணயம்
(d) அடிமை
9. அடிமை வம்சத்தினர் இந்திய துணைக்கண்டத்தை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
(a) 84 ஆண்டுகள்
(b) 45 ஆண்டுகள்
(c) 80 ஆண்டுகள்
(d) 60 ஆண்டுகள்
10. டெல்லி சுல்தான்களின் முதல் தலைநகரம் எது?
(a) டெல்லி
(b) ஆக்ரா
(c) சூரத்
(d) லாகூர்
11. லாகூரிலிருந்து தலைநகரை டெல்லிக்கு மாற்றியவர் யார்?
(a) இல்துமிஷ்
(b) முகமது கோரி
(c) குத்புதீன் ஐபக்
(d) பக்தியார் கல்ஜி
12. குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை கட்டியவர் யார்?
(a) குத்புதீன் ஐபக்
(b) ஷாஜகான்
(c) ஔரங்கசீப்
(d) இல்துமிஷ்
13. கீழை கங்கைச் சமவெளியைக் (பிகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பை குத்புதீன் ஐபக் யாரிடம் ஒப்படைத்தார்?
(a) பாபர்
(b) இல்துமிஷ்
(c) பக்தியார் கல்ஜி
(d) ரஷியா
14. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி என கருதப்படுவது எது?
(a) ஜமா மசூதி
(b) குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி
(c) மோதி மசூதி
(d) மேற்கூறிய எதுவும் இல்லை
15. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் யார்?
(a) இல்துமிஷ்
(b) ஜஹாங்கீர்
(c) குத்புதீன் ஐபக்
(d) அக்பர்
16. குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார்?
(a) குத்புதீன் ஐபக்
(b) இல்துமிஷ்
(c) அக்பர்
(d) மேற்கூறிய யாருமில்லை
17. குத்புதீன் ஐபக் உயிரிழந்த ஆண்டு?
(a) 1208
(b) 1205
(c) 1209
(d) 1210
18. குத்புதீன் ஐபக் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
(a) போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம்
(b) நூலகத்தின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து
(c) போரின்போது சண்டையிட்டதில்
(d) மேற்கூறிய எதுவுமில்லை
19. யாருடைய ஆட்சியின்போது மங்கோலியர்கள் செங்கிஸ்கான் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்?
(a) பால்பன்
(b) இல்துமிஷ்
(c) குத்புதீன் ஐபக்
(d) ஆரம் ஷா
20. மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்ற இல்துமிஷிடம் உதவி கேட்டவர் யார்?
(a) பால்பன்
(b) ஆரம் ஷா
(c) பக்தியார் கல்ஜி
(d) குவாரிஜம் ஷா ஜலாலூதீன்
21. துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட குழுவை உருவாக்கியவர் யார்?
(a) குத்புதீன் ஐபக்
(b) பால்பன்
(c) இல்துமிஷ்
(d) பாபர்
22. துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட குழுவின் பெயர் என்ன?
(a) இக்தாக்கள்
(b) சகல்கானி அல்லது நாற்பதின்மர்
(c) பன்டகன்
(d) ஜகிர்தார்
23. இக்தா என்பதன் பொருள் என்ன?
(a) ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலம்
(b) ஒருவகை வரி
(c) அடிமை
(d) மேற்கூறிய எதுவுமில்லை
24. இல்துமிஷ் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்?
(a) 15 ஆண்டுகள்
(b) 20 ஆண்டுகள்
(c) 22 ஆண்டுகள்
(d) 26 ஆண்டுகள்
25. இல்துமிஷுக்கு பிறகு டெல்லியில் அரியணை ஏறியவர்?
(a) பால்பன்
(b) ஆரம் ஷா
(c) ரஷியா
(d) பக்தியார் கல்ஜி
விடைகள்
1. (c) முகமது கோரி
2. (a) 12 ஆம் நூற்றாண்டு
3. (d) ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமை
4. (b) 1206
5. (a) முகமது கோரி
6. (d) குத்புதீன் ஐபக்
7. (c) மாம்லுக் அரசு
8. (d) அடிமை
9. (a) 84 ஆண்டுகள்
10. (d) லாகூர்
11. (c) குத்புதீன் ஐபக்
12. (a) குத்புதீன் ஐபக்
13. (c) பக்தியார் கல்ஜி
14. (b) குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி
15. (c) குத்புதீன் ஐபக்
16. (b) இல்துமிஷ்
17. (d) 1210
18. (a) போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம்
19. (b) இல்துமிஷ்
20. (d) குவாரிஜம் ஷா ஜலாலூதீன்
21. (c) இல்துமிஷ்
22. (b) சகல்கானி அல்லது நாற்பதின்மர்
23. (a) ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலம்
24. (d) 26 ஆண்டுகள்
25. (c) ரஷியா