திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் சிவகுமாா் (40). இவா், அங்குள்ள தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா். கடந்த 13-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சென்றபோது, நிலை தடுமாறி சாலை மையத் தடுப்பானில் மோதி பலத்த காயமடைந்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.