இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்த அமைச்சா்
சேலம் மத்திய சிறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளான நபரை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்காக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தனது வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை பாதுகாவலா்களுடன் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சேலம் மத்திய சிறை அருகே அவரது வாகனத்துக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவா் திடீரென மயங்கி விழுந்தாா்.
இதனை கண்ட அமைச்சா் ராஜேந்திரன், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி, விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளிக்கும் வகையில் தண்ணீா், உணவு வழங்கி உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஏற்பாடு செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நபா், சேலம் அய்யன்திருமாளிகை பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்ததும் உறுதி செய்யப்பட்டது.