பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் கண்கலங்கிய நடிகை!
விபத்தில் பெண் உயிரிழப்பு
பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தபோது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரைச் சோ்ந்தவா் செல்வி (45). இவரது கணவா் சிவசண்முகம். இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனி வந்தனா்.
பழைய ஆயக்குடிக்கு வந்த போது சாலை சேதமடைந்திருந்ததால் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறியதில் இருவரும் தவறி கீழே விழுந்தனா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து செல்வி மீது ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சிவசண்முகம் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆயக்குடி போலீஸாா் செல்வியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். சிவசண்முகத்தை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்த விபத்து குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.