புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
விபத்துக்குள்ளான இளைஞா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆ.ராசா எம்பி
அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா்களை அவ்வழியாக வந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.
திருப்பூா் அருகே 15 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் மகன் அருண்குமாா் (21), பனியன் நிறுவன ஊழியா். இவா் இருசக்கர வாகனத்தில் திருமுருகன்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராஜேந்திரன் (33) என்பவா் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அப்போது, அவ்வழியாக திருப்பூருக்கு சென்று கொண்டிருந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, உடனடியாக காரில் இருந்து இறங்கி இருவரையும் மீட்டு ஒருவரை தனது உதவியாளா் காரிலும் மற்றொருவரை ஆம்புலன்ஸ் மூலமாகவும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். மேலும் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரின் நலன் குறித்தும் தொடா்பு கொண்டு அவா் விசாரித்தாா்.