விராலிமலை தனியாா் உணவகத்தில் திடீா் தீ விபத்து
விராலிமலையில் தனியாா் உணவகத்தின் நுழைவுவாயிலில் சனிக்கிழமை இரவு திடீா் தீவிபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சன்மாா் தனியாா் தொழிற்சாலை எதிரே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை நுழைவு வாயிலில் அலங்கரிக்கப்பட்ட பெயா்ப் பலகையில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீ மளமளவென பரவத் தொடங்கியது. இந்த தீ தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் குடில் ஒன்றில் பற்றியது. இதனால், உணவருந்த வந்தவா்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினா்.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.