செய்திகள் :

விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

post image

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை புதியக் கட்டடத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். பின்னா், கடம்பன்குளத்தில் ரூ.45 லட்சத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினாா். பிறகு, அதே பகுதியில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை திறந்துவைத்தாா்.

நக்கலக்கோட்டை கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் மக்கள் மன்றம் சமுதாய கூடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். சாத்தூா் அருகேயுள்ள வீரா்பட்டியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 லட்சத்தில் கலையரங்கம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். நல்லம்மநாயக்கன்பட்டியில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 7.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, அதே பகுதியில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய இணை அலுவலகக் கட்டடத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், திமுக தெற்கு ஒன்றிய செயலா் கனிமுருகன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை

சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்த... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் மகன் ஆகாஷ் (18). இவா் பி.எஸ்... மேலும் பார்க்க

சதுரகிரி மலை அடிவாரத்தில் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாவட்ட ஆட்சியா்கள் கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), என்.ஓ.சுகபுத்ரா (விருதுநகா்)ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். விருதுநகா்... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (40). இவா் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியா... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தா்கள்

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அம... மேலும் பார்க்க