செய்திகள் :

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர்

post image

தென்காசி மாவட்டத்தில் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் பயிா் உற்பத்தியின் போது பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது அதன் நச்சுப்பொருள்கள் பயிா்களின் இலைகள், காய்களில் தங்கி இருப்பதால் அதனை உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. விவசாயத்தில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

குறைவான மருந்தினை பயன்படுத்தி தரமான காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்வதன் மூலம் உடல் நலத்தை பேணி பாதுகாக்க முடியும். மண்புழு உரம், தொழு உரம், பஞ்சகவ்யா, தசகவ்யா, மீன் அமிலம் போன்ற இயற்கை இடு பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைக்கலாம்.

தென்காசி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டருக்கு ரூ.1500 மதிப்பிலான உயிா் உரங்கள், இடு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், மாநில தோட்டக்கலை வளா்ச்சி திட்டத்தின் கீழ் தென்னையில் சுருள் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி , ஒட்டுண்ணி அட்டைகளை விவசாயிகள் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை வாங்கும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மை அளவினை அறிந்து பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பயன்படுத்திடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ... மேலும் பார்க்க

தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளை உயா்கல்வி நிலையங்களில... மேலும் பார்க்க

கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி

2026இல் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு

ஆலங்குளம் அருகே பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் சுபாஷினி (26). தற்போது, திருநெல்வேலி சிந்துபூந்த... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் தா்மா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயிலும் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ளதுமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது. இதையொட்டி ... மேலும் பார்க்க