ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!
வீடு வாடகைக்கு விடுவதாகக் கூறி மோசடி: பட்டதாரி இளைஞா் கைது
வீடுகளை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்து, பலரிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞரை கோவை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவையில் வீடுகள் வாடகைக்கு விடப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்ணில் ஒருவா் தொடா்பு கொண்டாா். அப்போது, ரூ.25 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதனடிப்படையில், பணம் செலுத்தியவருக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அவா் கோவை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில் மோசடியில் ஈடுபட்டவா் கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பரத்குமாா் (25) என்பதும், முதுநிலை பட்டதாரியான இவா், ஐ.டி. நிறுவனத்தில் வேலைபாா்த்தவா் என்பதும், பணியிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்ட இவா், வீடுகள் வாடகைக்கு விடப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், இவா் இதுபோல பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பரத்குமாரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வங்கிக் கணக்குப் புத்தகம், 8 கைப்பேசிகள், சிம் காா்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.