Survival: உலகிலேயே வலி மிகுந்த பிரசவத்தை சந்திக்கிற விலங்கு இதுதான்!
வீட்டுவசதி வாரியத்தின் கடன் நிலுவைதாரா்களுக்கு சலுகை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கி, கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக்காலம் முடிந்து, நிலுவை வைத்துள்ளோருக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி வாரியத்தின் திருச்சி வீட்டுவசதிப் பிரிவு செயற்பொறியாளா் ஆா். ரெங்கநாதன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று, கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக் காலம் முடிந்தும், நிலுவை வைத்துள்ளோருக்கு வட்டிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தவணைத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் வரும் 2026 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இச்சலுகையில், மாதத் தவணையில் அபராத வட்டி முழுமையாகவும், வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாகவும், இறுதி விலை- வித்தியாசத் தொகையில் ஒவ்வோா் ஆண்டும் 5 மாத வட்டியும் தள்ளுபடி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்று நிலுவை வைத்துள்ளோா் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.