செய்திகள் :

வெறும் 1,592 ரூபாய்க்கு திருமணம் செய்த மணமக்கள்; கவனம் பெற்ற ராஜஸ்தான் தம்பதி - எப்படி தெரியுமா?

post image

ராஜஸ்தானைச் சேர்ந்த கமல் அகர்வால் மற்றும் அவரது நீண்டநாள் காதலி ரூச்சி, பிரமாண்டமான திருமண விழாக்களைத் தவிர்த்து, எளிமையான நீதிமன்றத் திருமணத்தை மேற்கொண்டு இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளனர்.

பல லட்சங்கள் செலவு செய்து நடைபெறும் திருமணங்களுக்கு மத்தியில், இவர்களது திருமணம் வெறும் 1,592 ரூபாயில் நிறைவடைந்ததுள்ளது.

Rep image

கமல் தனது ரெடிட் பதிவில், தனது அண்ணனின் “எளிமையான” திருமணத்தைக் கண்டு, இதுபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளார்.

அவரது வலைப்பதிவின்படி, இந்தத் தம்பதி ஏப்ரல் 17, 2025 அன்று திருமண அறிவிப்புப் படிவத்தைச் சமர்ப்பித்து, மே 28 அன்று பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் சமீபத்திய பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இவர்களது திருமணத்திற்கு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் சில முத்திரைத் தாள்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளன.

ஆடம்பர உடைகள் போன்றவற்றைத் தவிர்த்த இவர்கள், மே 28 அன்று திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். முத்திரைத் தாள்களுக்கு ரூ.320, நோட்டரிக்கு ரூ.400, அவசர புகைப்படங்களுக்கு ரூ.260, அறிவிப்புப் படிவ அச்சிடலுக்கு ரூ.290 என அந்த திருமணத்திற்காக அவர்கள் செலவு செய்த 1,592 ரூபாய் குறித்தும் அவர்கள் விவரித்துள்ளனர்.

இவர்களது 1,592 ரூபாய் திருமணம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது. '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க

’2 பேருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் தான்’ - தந்தை சொத்தில் பங்கு கேட்ட பிள்ளைகள் ஷாக்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இறந்த தந்தையின் ரூ.3.6 கோடி (மூன்று மில்லியன் யுவான்) சொத்துக்காக அண்ணன், தங்கை இருவருமே சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் அவரத... மேலும் பார்க்க

TCS: சிஇஓ முதல் நிர்வாக இயக்குநர் வரை - வைரலாகும் TCS நிறுவன அதிகாரிகளின் சம்பள பட்டியல்

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் டிசிஎஸ் (TCS) நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் (TC... மேலும் பார்க்க

இங்கிலாந்து: செல்லமாக நக்கிய வளர்ப்பு நாய்; ஒரு வாரத்தில் இறந்துபோன 83 வயது பெண்மணி; என்ன நடந்தது?

இங்கிலாந்தைச் சேர்ந்த 83 வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் அவரின் காலை நாவினால் தீண்டியதை எடுத்து அவருக்குத் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அந்தப் பெண்மணியின் காலில் ஏற்கனவே ... மேலும் பார்க்க