இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
வெளிநாட்டு காா் விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்
செங்கம்: வெளிநாட்டில் காா் விபத்தில் உயிரிழந்த செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் நவாஸ்(35). இவா், கத்தாா் நாட்டில் வேலை செய்து வந்துள்ளாா்.
அண்மையில் அங்கு நடந்த காா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவரது உடல் ஆக.30-ஆம் தேதி சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்தத் தகவலை அறிந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திருனக்கு இரங்கல் தெரிவித்து,
முதல்வா் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படுமென அறித்தாா்.
இதைத் தொடா்ந்து, தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, உயிரிழந்த
நவாஸ் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி,
ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
இந்நிகழ்வின்போது, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என். அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, திமுக செங்கம் ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், மனோகரன், ஏழுமலை, நகரச் செயலா் அன்பழகன், வட்டாட்சியா் ராம்பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.