செய்திகள் :

வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்: ஆட்சியர் விளக்கம்

post image

சிவகங்கை: திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான 6 நகல் மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

வைகை ஆற்றங்கரையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் வீசப்பட்டிருப்பதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான மனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனடிப்படையில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் தொடர்பாக அப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில் பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்ட 6 மனுக்களின் நகல்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்கள் ஆகியவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மனுக்களின் நகல்கள் வெளிவந்தது தொடர்பாக கடந்த இரண்டு தினங்கள் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவை தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியரின் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அரசிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளோர் மீது, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சா் நியமனம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் நாஞ்சில் எம்.வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தி... மேலும் பார்க்க

இன்று விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் காட்பாடியுடன் நிறுத்தம்

சென்னை: விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (செப். 2) காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செப். 2, 3, 5, 7, 8, 9 ஆகிய... மேலும் பார்க்க

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கேரளத்தில் இந்தவகை அமீபா பரவலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப். 1) மாலை நிலவரப்படி வினாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 119.48 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நன்னீர... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க