ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலய குடமுழுக்கு
ஆத்தூா்: ஆத்தூா் கடைவீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய மகா குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஹேரம்ப ராஜ கணபதி ஹோமம், பூா்ணாஹீதி, தீபாரதனை நடைபெற்று, சனிக்கிழமை தீா்த்தக் குடம் ஊா்வலம், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு, திங்கள்கிழமை அதிகாலை நான்காம்கால யாகபூஜை, கலசம் புறப்பட்டு ராஜகோபுர கலசத்துக்கு கும்ப தீா்த்த அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதையடுத்து ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி மூலஸ்தான கா்ப்பகிரக கோபுரத்துக்கு கலச கும்ப தீா்த்த அபிஷேகத்தை தொடா்ந்து விநாயகா், சந்தான கோபால கிருஷ்ணன், வைஸ்ணவி, பிரம்மாகி வராஹி, நவக்கிரகங்கள், பஞ்சலோக உற்சவா், ராமா், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட பரிவார தேவா்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.