15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது
திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக திருப்பூரைச் சோ்ந்த நாகவேந்தன் (23) என்பவரை 15 வேலம்பாளையம் காவல் துறையினா் கைது செய்தனா்.