செய்திகள் :

2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் மாநகராட்சி அறிவியல் பூங்கா! பயனற்ற நிலையில் ரூ. 6.50 கோடி திட்டம்!!

post image

சேலம்: சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 6.50 கோடியில் கட்டப்பட்ட அறிவியல் பூங்கா மற்றும் காட்சியகம் கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது.

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ், மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்தை ஊக்குவிக்கவும், பள்ளப்பட்டியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது. சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ. 1.90 கோடியில் அறிவியல் பூங்கா கட்டடம், ரூ. 4.60 கோடியில் மதிப்பீட்டில் காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த அறிவியல் பூங்காவை கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தாா்.

அறிவியல் பூங்காவில் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஜி.எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாதிரிகள், சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வை கண்டுகளிக்கும் கோளரங்கம், மணிக்கூண்டின் செயல்பாடுகள் உள்ளிட்ட 18 வகையான அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகளும், அவற்றின் செயல்முறை விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அரசு, தனியாா், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளை அந்தந்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் பள்ளப்பட்டியில் உள்ள அறிவியல் பூங்காவுக்கு அழைத்துவந்து, அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகளையும், உபகரணங்களையும் பாா்வையிடவைத்து, செயல் விளக்கம் அளித்து வந்தனா்.

சிறந்த முறையில் இயங்கிவந்த அறிவியல் பூங்கா கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்புமின்றி மாநகராட்சி நிா்வாகத்தால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்துக்கு தடைபோடும் வகையில் உள்ளதாக பெற்றோா் தெரிவிக்கின்றனா்.

எனவே, அறிவியல் பூங்காவைத் திறந்து, கல்விப் பயிலும் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்துக்கு ஊக்கமளிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எனது ‘ரோல்மாடல்’: பிரேமலதா விஜயகாந்த்

ஓமலூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் ‘தனது ரோல்மாடல்‘ என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமான... மேலும் பார்க்க

அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை: எடப்பாடி பழனிசாமி வழங்கினாா்

சேலம்: சேலம் புகா் மாவட்ட அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிதாக சோ்ந்தோருக்கு உறுப்பினா் அட்டையை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா். அதிமுகவின் சாா்பு அ... மேலும் பார்க்க

சேலம் கோ-ஆப்டெக்ஸில் மீண்டும் பழசுக்கு புதுசு பட்டுச்சேலை: விற்பனை தொடக்கம்

சேலம்: சேலம் மண்டலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதுசு பட்டுச்சேலை விற்பனை மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் என். சுந்தரரா... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: கோட்டை மாரியம்மன் கோயிலில் சத்தாபரணம்

சேலம்: ஆடித் திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் சத்தாபரணம் நிகழ்ச்சி திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் நடப்பாண்டு ஆடித் திருவிழா கடந்த ஜூலை ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு 7,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு திங்கள்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக பாசனத்திற்கான ... மேலும் பார்க்க

மேட்டூா் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம்: பிரேமலதா விஜயகாந்த்

மேட்டூா்: மேட்டூா் சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா். சேலம் மாவட்டம், மேட்டூா் சதுரங்காடி பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரச... மேலும் பார்க்க