செய்திகள் :

2026 தேர்தல் : 'தயக்கம் காட்டும் கட்சிகள்; அமித் ஷா சொல்வது ஒரு வகையான பில்டப்' - திருமாவளவன்

post image

2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டங்கள், மாநாடுகள் என பரபரப்பில் உள்ளது.

இப்போது வரை, திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட்சிகளை தங்களது மெகா கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்தத் தேர்தல் குறித்து, நேற்று அரியலூரில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.

கட்டுக்கோப்பாகவும், வலுவாகவும்..!

"இதுவரையில் திமுக கூட்டணிக்கு அதிமுக சவாலாக அமைவதற்கான எந்தச் சூழலும் கனியவில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாகவும், வலுவாகவும் உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி இன்னும் வடிவமே பெறவில்லை. அவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. எதார்த்தமான நிலையே இது தான்.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

அமித் ஷா இரு முறை வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே கூட்டணியில் இருந்தக் கட்சிகள் கூட அந்தக் கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் தலைவர்கள் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை.

ஆகவே, அதிமுக, பாஜகவைத் தவிர, வேறு எந்தக் கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன என்றே தெரியவில்லை. இந்தச் சூழலில் அதிமுக, பாஜக வெல்லும்... கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்வதெல்லாம் ஒரு வகையான பில்டப். இந்த நொடி வரையில் திமுக கூட்டணி தான் வலுவாக உள்ளது... வடிவம் பெற்றுள்ளது" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

முருக பக்தர்கள் மாநாடு: 10,000 வாகனங்களில் 2.5 லட்சம் பேர்? மேடையில் முருகன் சிலைகள் - நேரடி விசிட்

மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டுக்காக அறுபடை முருகன் கோவில்களைப் போன்ற செட் ஒன்று... மேலும் பார்க்க

கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் நடந்த தனியார் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுக ஆட்சியின் சக்கரம் சுழல்கிறதோ இல்லையோ, அரசு பேருந்தின்... மேலும் பார்க்க

"இந்தியாவில் அமெரிக்கப் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டாம்" - அமெரிக்கா எச்சரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.ஜூன் 16ம் தேதி வெளியான இந்த ஆலோசனை அறிக்கையில், இந்தியாவின் சில பகுதிகளில் குற்றங... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: ``முருகனும் சிவனும் இந்துவா?" - சீமான் கேள்வி

இந்து முன்னணி அமைப்பின் சார்பாக இன்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தவிருக்கிறது.உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வருவதாகக் கூறப்படுகிறது.ம... மேலும் பார்க்க

US attacks on Iran: பாராட்டும் இஸ்ரேல்; கண்டிக்கும் ஜனநாயக அமைப்புகள் என்ன சொல்கின்றன?

ஈரானின் அணு ஆயுதத் தளங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.அதே நேரம் இஸ்ரேல... மேலும் பார்க்க

"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" - எல்.முருகன்

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்ட... மேலும் பார்க்க