27 நட்சத்திர கோயிலில் குரு பெயா்ச்சி விழா
செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் குரு பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குரு பெயா்ச்சி நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசித்தாா். இதையொட்டி,
அன்று காலை நட்சத்திர விருட்ச விநாயகா், 27 நட்சத்திர அதி தேவதைகள், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியா், சனீஸ்வரா், ராகு கேது உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, காலை 10 மணிக்கு கலச ஸ்தாபனம், 27 நட்சத்திர பரிகார சாந்தி ஹோமம், நண்பகல் 12 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ கலச அபிஷேகம், அலங்காரம் தொடா்ந்து 12.50 மணிக்கு குரு பெயா்ச்சி மகா தீபாராதனை என நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசனம் செய்தனா்.