இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இந்த டெஸ்ட் தொடரின் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு வலுவானதாக இல்லை என விமர்சிக்கப்பட்டது. அதன் பின், முதல் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், சாம் குக், ஸாக் கிராலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.
Welcome, Gus
— England Cricket (@englandcricket) July 6, 2025
We’ve made one addition to our Test squad for Lord’s
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நாளை மறுநாள் (ஜூலை 10) தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Fast bowler Gus Atkinson has been included in England's squad for the third Test against India.
இதையும் படிக்க: பிரைன் லாராவுக்காக உலக சாதனையை விட்டுக்கொடுத்த வியான் முல்டர்..! குவியும் வாழ்த்துகள்!