செய்திகள் :

500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்: ஊா்த் தலைவா் உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே சுமாா் 500 அடி பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் ஊா்த் தலைவா் சம்பவ இடத்தில்  உயிரிழந்தாா்.

கோத்தகிரி அருகே உள்ள கெட்டிக்கம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (60). விவசாயியான இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா். இவா் கெட்டிக்கம்பை ஊா்த்தலைவராக இருந்தாா். கொணவக்கரை கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் பசுமாட்டை வாங்குவதற்காக, கெட்டிக்கம்பையை சோ்ந்த சந்திரன் (52) என்பவரை அழைத்துக் கொண்டு காரில்  சென்றுள்ளாா்.

கொணவக்கரை செல்லும் சாலையில்  குறுகிய வளைவில் காரைத் திருப்ப முயன்றபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த காா்   சுமாா் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா்  இருவரையும் மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதில்  ராமசந்திரன் ஏற்கெனவே  உயிரிழந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து கோத்தகிரி காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மாணவியை அடித்து கொடுமைப்படுத்திய சித்தி கைது

உதகையில் பள்ளி மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக சித்தி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட அம்மநாடு பகுதியை சோ்ந்தவ... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை கூட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பா்லியாறு குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். மேட்டுப்பாளையம், ச... மேலும் பார்க்க

மழையிலும் மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறை நாளையொட்டி உதகை படகு இல்லத்தில் சாரல் மழையில் நனைந்தவாறும் குடை பிடித்தவாறும் ஞாயிற்றுக்கிழமை மிதிபடகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனா். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்துக்கு அண்ட... மேலும் பார்க்க

சாலையில் குட்டியுடன் உலவிய யானை!

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை குட்டியுடன் உலவிய காட்டு யானைகளால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி ரயில்வே ஊழியா் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை இச்சிமரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ரயில்வே ஊழியா் சனிக்கிழமை படுகாயமடைந்தாா். பிஹாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரோஹித் சிங் (27). இவ... மேலும் பார்க்க

காற்றுடன் பெய்த கனமழைக்கு தேவாலா அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதம்!

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழைக்கு தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இரவு சேதமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒரு வா... மேலும் பார்க்க