6 ஏர்பேக் அம்சத்துடன்.. டொயோட்டா கிளான்சா!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கிளான்சா மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான உபகரணங்களாக 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சம் இடம்பெறும் என அறிவித்துள்ளது.
கிளான்சா மாடலின் இ, எஸ், ஜி, வி ஆகிய நான்கு வேரியண்ட்களிலும் இனி 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றிருக்கும். இந்த மாற்றம் இந்தியச் சந்தையில் மாருதி சுசுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு எதிராகப் போட்டியிடும் ஹேட்ச்பேக்கின் பிரபலமாக இந்த கார் உள்ளது
இந்த நிறுவனம் சிறப்பாக பிரஸ்டீஜ் எடிஷன் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொகுப்பில் ஏழு டீலர் நிறுவப்பட்ட பாகங்கள் உள்ளன. மேலும் பிரீமியம் டோர் வைசர்கள், குரோம் மற்றும் கருப்பு நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட பாடி சைடு மோல்டிங், பின்புற விளக்கு அலங்காரம், வெளிப்புற ரியர்வியூ, கண்ணாடிகள் மற்றும் குரோம் டிரிம்கள், ஒளிரும் டோர் சில்ஸ், பின்புற ஸ்கிட் பிளேட் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
இதில் 1.2 லிட்டர் பெட்ரோன் என்ஜின், அதிகபட்சமாக 90 எச்.பி பவரையும், 113 என்.எம்.டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுமட்டுமின்றி டொயோட்டா ஹைரைடர் பிரஸ்டிஜ் பேகேஜ் போன்று டீலர் அளவில் பொருத்திக் கொள்ளக்கூடிய உதிரி பாகங்களும் கிடைக்கும். பிரட்டீஜ் எடிஷனுடன் வழங்கப்படும் உதிரிப் பாகங்கள் ஜூலை 31 வரை மட்டுமே கிடைக்கும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.
டொயோட்டா கிளான்சா ஸ்போர்டிங் ரெட், இன்ஸ்டா ப்ளூ, என்டிசிங் சில்வர், கேமிங் கிரே மற்றும் கஃபே வைட் போன்ற இரண்டு-டோன் மற்றும் ஒற்றை-டோன் வண்ண விருப்பங்களின் கலவையில் தொடர்ந்து கிடைக்கிறது.