வெள்ளக்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வெளிமாநில தொழிலாளி கைது
Apple: ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் ஆப்பிள்கள்தான் தரமானதா? அதிக விலைக்கு வாங்கும் மக்கள்; உண்மை என்ன?
பொதுவாக பழக்கடைகளில் அல்லது சந்தைகளில் ஆப்பிள் அல்லது சில பழங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்கள் தான் தரம் வாய்ந்தது என்று எண்ணி அதனை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.
உண்மையில் எதற்காக அவ்வாறு ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகிறது என்பது குறித்து 99 சதவிகிதம் பேருக்குத் தெரியாது. ஆப்பிள் மட்டுமல்ல, ஆரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான ஆப்பிள்களைப் பார்க்கும் பெரும்பாலான மக்கள் அவை தரம் உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள்.
பெரும்பாலான டீலர்கள் ஸ்டிக்கர் ஒட்டிய ஆப்பிள்களை அதிக விலைக்கு விற்கிறார்கள். ஆனால் இந்த ஸ்டிக்கர் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. ஆப்பிள் வாங்கும்போது, ஆப்பிளில் இருக்கும் ஸ்டிக்கரைப் படிக்கவேண்டும்.
அந்த ஸ்டிக்கரில் பழத்தின் தரம் மற்றும் அது எப்படி வளர்க்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இருக்கும். சில ஸ்டிக்கர்களில் நான்கு இலக்க எண்கள் இருக்கும். அதாவது அவை 4026 அல்லது 4987 போன்ற எண்களைக் கொண்டிருக்கும். அப்படி எண்களைக் கொண்டுள்ள பழங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டவை எனக் குறிக்கிறது. இந்தப் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழங்கள் மலிவானவை. நீங்கள் அவற்றை வாங்கினால் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உள்ள பழங்களை வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
சில பழங்களில் ஐந்து இலக்க எண்கள் இருக்கும். அதாவது 84131, 86532 போன்ற 8ல் தொடங்கும் இந்தப் பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. இந்த பழங்கள் இயற்கையானவை அல்ல. பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட பழங்களைவிட அவை விலை சற்று அதிகம்.
சில பழங்களில் 9 இல் தொடங்கும் ஐந்து இலக்க குறியீடு இருக்கும். 93435 என்று சொன்னால், பழம் இயற்கை முறையில் விளைந்தது என்றும் பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அர்த்தம். பாதுகாப்பான பழம் என்றாலும் விலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். இனிமேல் ஸ்டிக்கரில் உள்ள எண்களை பார்த்து பழங்களை வாங்குகள்!