செய்திகள் :

Gaza: இஸ்ரேலின் கொடூர தாக்குதல்... பெண் மருத்துவரின் 10 குழந்தைகளில் 9 பேர் பலியான சோகம்

post image

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காஸாவின் இரண்டாம் பெரிய நகரமான கான் யூனிஸிலுள்ள டாக்டர் அலா அல்-நஜ்ஜாரின் குடும்பம் கிட்டத்தட்ட முழுமையாக கொல்லப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் அலா அல்- நஜ்ஜார் தனது பத்து குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு, கடந்த வெள்ளியன்று, உயிர்காக்கும் சேவையை செய்ய தெற்கு காஸாவில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றிருந்தார்.

அவ்வேளையில், டாக்டரது வீட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. சில மணி நேரத்தில், டாக்டரின் சொந்த குழந்தைகள் ஏழு பேரின் உடல்கள் மோசமாய் எரிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

Gaza

சொல்ல முடியாத துயரம்

சனிக்கிழமை நிலவரப்படி, இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த 7 மாதக் குழந்தை மற்றும் 2 வயதுக் குழந்தை என டாக்டரின் மேலும் இரண்டு குழந்தைகளது உடல்கள் மீட்கப்பட்டன.

"இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், டாக்டரருடைய பத்து குழந்தைகளில் ஒன்பது குழந்தைகளான சித்தார், லுக்மான், சாடின், ரெவல், ருஸ்லான், ஜுப்ரான், ஈவ், ரக்கன் மற்றும் யாஹ்யா உயிரிழந்தனர்.

டாக்டரின் கணவர் மற்றும் ஒரு குழந்தை காயங்களோடு உயிர்தப்பினர். நஜ்ஜாரின் கணவருக்கு மண்டை ஓட்டின் எலும்பில் முறிவு ஏற்பட்டது . மேலும் மார்பு, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் இப்போது நாசர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Gaza

டாக்டர் தம்பதியினரின் உயிரோடு இருக்கும் ஒரே மகனான 11 வயது ஆடம், பலத்த காயங்களோடு தற்போது தாயுடன் மிதமான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். தந்தை மற்றும் மகனுக்கு இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

`தாய் அதிர்ச்சியில் இருக்கிறாள்’

``இஸ்ரேலின் இந்த தாக்குதல் நம்பமுடியாத ஒன்று. தாக்குதல் குறித்து கேள்விப்பட்டபோது, அல்-நஜ்ஜார் அடைந்த அதிர்ச்சியை நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாது.

உலகெங்கும் உள்ள மக்கள் பாதிக்கப்படும் மனிதகுலத்தின் பக்கமிருக்க வேண்டும். குண்டுவெடிப்புக்கு எதிராகப் பேச வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு குரல் இல்லை. குழந்தைகளின் தாய் அதிர்ச்சியில் இருக்கிறாள். தயவுசெய்து, உலகில் உள்ள அனைவரும் தாயுடைய குரலாக இருக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்" என தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார் நாசர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவப் பிரிவின் தலைவரான அஹ்மத் அல்-ஃபர்ரா.

Gaza

தெற்கு காஸாவிலுள்ள கான் யூனிஸின் சுற்றுப்புறத்திலிருக்கும் டாக்டரது வீட்டை இலக்காக வைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது என காஸா சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்களன்று, காஸாவிலுள்ள கான் யூனிஸில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கட்டாய வெளியேற்ற உத்தரவுகளையும் இஸ்ரேல் பிறப்பித்தது. இப்பகுதியில் தினமும் கடுமையான, கொடிய குண்டுவெடிப்பு நடந்து வருகிறது.

வெள்ளி மற்றும் சனியன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல்-நஜ்ஜார் குழந்தைகள் உட்பட மேலும் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 79 பேரின் உடல்கள், வெள்ளி முதல் சனிக்கிழமை நண்பகல் வரை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2023 முதல் தற்போது வரை, காசாவில் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 53,901 என்றும், 122,593 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்றம்பள்ளி: முக்கிய பேருந்து நிறுத்தம்; ஆனால் நிழற்குடை? - கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகு... மேலும் பார்க்க

வேலூர்: சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள் - அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அருகே அமைந்திருக்கிறது, ஓங்கப்பாடி கிராமம். இந்த கிராமத்தின் அருகே வேலூரில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையின் ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டிப் போடப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Aadhar Card-ல் மாறும் கடைசிப் பெயர்; கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பம் - தவிர்ப்பது எப்படி?!

வங்கி கணக்கில் எதாவது மாற்றம், டிக்கெட் பதிவு... எந்த இடத்திற்குச் சென்றாலும் முதலில் கேட்கப்படும் கேள்வி 'ஆதார் இருக்கிறதா?' என்பது தான். இன்று இந்திய மக்களின் வாழ்வில் ஆதார் இன்றியமையாத இடத்தைப் பிட... மேலும் பார்க்க

`வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31 இல்ல!' - நீட்டிக்கப்பட்ட தேதி; காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதியே கடைசி நாள். ஆனால், இந்த ஆண்டு (2025) கடைசி நாளை செப்டம்பர் 15-ம் தேதிக்கு மாற்றியுள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT).வருமான வர... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கழிவறையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த நகராட்சி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல் மிகுந்த நகராட்சி ஆகும் . பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களால் வாணியம்பாடி பேருந்து நிலையம் எப்போதும் நெரிசல் மிகுந்த... மேலும் பார்க்க

உ.பி: மருத்துவர், செவிலியர், படுக்கைக்கூட இல்லை... அரசு மருத்துவமனையில் தரையில் நடந்த பிரசவம்!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பார்கள். கர்ப்பிணி என்றாலே எல்லோருக்கும் இயற்கையாகவே மனதில் ஒரு அன்பும், பரிவும் ஏற்பட்டுவிடும். அதனால்தான் ஒவ்வொரு மாநில அரசும் கர்ப்பிணிகளுக்கென பல திட்டங... மேலும் பார்க்க