தில்லியில் தமிழக அளுநருடன் டிடிஇஏ நிா்வாகிகள், பள்ளி முதல்வா்கள் சந்திப்பு
Irrfan Khan: "இர்பானுடைய மரணத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை!" - இர்பான் கானின் மனைவி
பாலிவுட் நடிகர் இர்பான் கான் கடந்த 2020-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய மனைவி சுதாபா சிக்தர் தற்போது ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.
சுதாபா சிக்தர் ஒரு பெங்காலி. டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு எழுத்தாளரும் கூட. சமீபத்தில் இவர் அளித்திருக்கும் பேட்டியில் இர்பான் கான் உடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், “நான் ஒரு செலிப்ரிட்டியைத் திருமணம் செய்திருந்தாலும், எனக்கு அவர் செலிப்ரிட்டியாகத் தெரியவில்லை. நானும் இர்பான் கானும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் ஒன்றாகப் படித்தோம்.
அவர் என்னுடைய கிளாஸ்மேட் தான். இர்பான் கானைப் பலமுறை நான் அவருடைய டயலாக் டெலிவரியைக் குறித்து திட்டியிருக்கிறேன். ஆனால், நாட்கள் போகப் போக அவர் ஒரு பெரிய நடிகராக உருவெடுத்தார்.
அவர் பெரிய நடிகரான பிறகும் கூட நான் பெரிய அளவுக்கு அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டதில்லை. இர்பான் மிகவும் சிறிய கிராமத்திலிருந்து வந்தவர். ஆனால், நான் அப்படி இல்லை. எனக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
ஆனால், அதைப் பற்றி பேசிப் புரிந்து கொண்டு சந்தோஷமாக உரையாடுவதற்கான மனப்பான்மை இர்பானிடம் அதிகம் இருந்தது.
இர்பானுடைய மரணத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. நான் இன்னும் ஹீலிங் தருவாயில்தான் உள்ளேன். ஆனால், என்னை வாழ வைப்பதற்குக் காரணமாக இருப்பது இரண்டே விஷயங்கள்தான்.
ஒன்று, என்னுடைய குழந்தைகள். மற்றொன்று, அவரோடு நான் வாழ்ந்த நினைவுகள். எனக்கு இன்னும் அவருடைய வாசனை ஞாபகம் இருக்கிறது. அவர் மிகவும் மென்மையான ஒரு மனிதர்.
அவருடைய நிதானத்தையும் பொறுமையையும் தான் நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அவருடனான என்னுடைய உரையாடல்களும் சண்டைகளும் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றன.

அவர் இப்போதும் என் வாழ்க்கையின் ஒரு பெரும் பங்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்த பிறகு, நான் பல ஆண்டுகளுக்கு எதுவுமே எழுதவில்லை.
ஆனால், இப்போது மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கிறேன். நான் தற்போது தான் ஒரு எழுத்தாளராக மாறியிருக்கிறேன்.
ஆனால், நான் ஒரு டூரிஸ்ட் கைடாக வேலை செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். கட்-ஆஃப் கம்மியாக இருந்ததால் எனக்கு அந்த கோர்ஸில் சேர முடியவில்லை.
ஆனால், இர்பானைத் திருமணம் செய்த பிறகு, அவருடைய ஆக்டிங் கரியருக்காக மும்பைக்கு வந்தோம்.
கோவிந்த் நிஹலானியுடைய படத்தில் இர்பான் நடித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று என்னை டயலாக் எழுதுமாறு நிஹலானி கேட்டார். நானும் எழுத ஒப்புக்கொண்டேன்.
“ஹவுஸ் ஆஃப் பெர்னார்டா ஆல்பா” என்ற படத்திற்கு நான் டயலாக் எழுதினேன். “பனேகி அப்னே பாத்” என்ற தொலைக்காட்சி தொடருக்கும் நான் எழுதினேன்.
இப்போதும் அந்தத் தொடரை எடுத்துப் பார்த்தாலும், அதில் உள்ள வசனங்களைச் சமகாலத்திலும் பொருத்திப் பார்க்க முடியும். நான் பெருமிதத்தோடு சொல்லவில்லை.
ஆனால், உண்மையில் என்னுடைய எழுத்து என்னை நிறைவு செய்தது. 'சுபாரி', 'கஹானி' போன்ற மற்ற படங்களுக்கும் டயலாக் எழுதியிருக்கிறேன்.
'கஹானி' எனக்கு மிகவும் பிடித்த ஒரு படமாகும். அது ஒரு பெண்ணுடைய குரல். ஆனால், மிகவும் வித்தியாசமான ஒரு குரல்.

இர்பான் நடித்த “கரீப் கரீப் சிங்கிள்” என்ற படத்தை நான்தான் ப்ரொட்யூஸ் செய்தேன். ஆனால், அதில் இர்பானுக்கு டயலாக் எழுதியது வேறு ஒரு பெண்.
அதனால்தான் அந்த கேரக்டரை எல்லாப் பெண்களும் மிகவும் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள்.
என்னுடைய இந்த எழுத்துப் பயணத்தை வைத்து எல்லாப் பெண்களுக்கும் நான் கூறுவது ஒன்றுதான்: நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த அம்மாவாக இருக்கலாம், மிகச் சிறந்த தாயாக இருக்கலாம்.
ஆனால், அதில் எப்போதுமே உங்களை நீங்கள் இழந்துவிடாதீர்கள். 'Love Yourself'” என்று புன்னகையுடன் முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...