செய்திகள் :

L2: எம்புரான் படத்திற்குத் தடை கோரிய கேரள பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

post image

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்புரான்' கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப் போலக் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தாக, வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அக்காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்படும் என்று மோகன்லால் தெரிவித்திருந்தார்.

எம்புரான்
எம்புரான்

இந்நிலையில், எம்புரான் படத்துக்கு உடனடியாகத் தடை விதிக்கக் கோரி கேரள பா.ஜ.க நிர்வாகி வி.வி. விஜேஷ் என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், "எம்புரான் படத்தில் 2002 கோத்ரா கலவரத்தைக் குறிப்பிடும் காட்சிகள் இருக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சகத்தைப் பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிட்டுள்ளனர். மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் காட்சிகளைச் சித்தரித்துள்ளனர்.

விஜேஷ்
விஜேஷ்

இந்தப் படம் வகுப்புவாதக் கலவரத்தைத் தூண்டக்கூடும். வகுப்புவாதக் கலவரத்தைத் தவிர்க்கப் படத்தின் காட்சிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் படத்திற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனிடையே நிர்வாகி விஜேஷ் பா.ஜ.க-வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Empuraan: ``என் மகனை பலிகொடுக்க முயற்சிக்கிறார்கள்; இது தாயின் வலி'' - ப்ரித்விராஜின் தாயார் வேதனை

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்திருக்கும் `எம்புரான்' படத்திற்கு சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரம் தொடர்பான காட்சிகள் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜாராத் கலவர சம்பவ... மேலும் பார்க்க

Empuraan: எம்புரானுக்கு எழுந்த சர்ச்சை; 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டம்

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ̀எல் 2: எம்புரான்'. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ̀லூசிஃபர்' படத்தின் ... மேலும் பார்க்க

L2 Empuraan: தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள்; நீக்கக்கோரி விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூசிஃபர் படத்தின் 2 ஆம் பாகம். இந்தத் திரைப்படத்தில் 2002 ... மேலும் பார்க்க

L2 Empuraan: ''லூசிஃபர் படத்தைப் பற்றி சிரஞ்சீவி சார்கூட நடந்த உரையாடல்'' - ப்ரித்விராஜ் ஷேரிங்ஸ்

தனது கச்சிதமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கமற இடம் பிடித்திருப்பவர் நடிகர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்க... மேலும் பார்க்க

Empuraan: `மலையாள சினிமாவின் புதிய உச்சம்' - எம்புரான் படத்துக்கு ஆதரவு தெரிவித்த பினாராயி விஜயன்

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் ... மேலும் பார்க்க

Empuraan: "மோகன்லால் மீது தவறு இல்லை" - பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி!

மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் திரைப்படம் எம்புரான். பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வகுப்புவாத வன்முறை சார்ந்த காட்சிகள், 2002 குஜராத் கலவரத்தை ... மேலும் பார்க்க